சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு நேற்று கொழும்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்வது மற்றும் முக்கியமான நிதி சவால்களை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வந்துள்ளதுடன் பல்வேறு உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
எனினும், இந்த உடன்பாடுகள், பொதுமக்களை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தற்போதைய அரசாங்க கட்சி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்தது.
இதன் அடிப்படையிலேயே இன்றைய சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளன.