மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடர் ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெறும். மீதமுள்ள 2 போட்டிகள் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டிகள் பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை அணியில் தலைவராக சரித் அசலங்க செயற்படவுள்ளதுடன், அந்த அணியில் பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ,கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெள்ளாலகே, வனிந்து ஹசரங்க, மகீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வண்டர்ஸே, சமிது விக்கிரமசிங்க, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, மற்றும் மொஹமட் ஷிராஸ் ஆகியோர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.