கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எந்தத் தரத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகளை நடத்துவதற்கு உரிய அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.