பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ பதவிப்பிரமாணம்..!

tubetamil
0

 இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த பதவியை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.



முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட பதில் பிரதம நீதியரசர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்ராமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top