தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை !

tubetamil
0

 தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இவ்வறு தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக  1 இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும்.

சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும்.

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை, மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல.

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம்.

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top