எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்காகவே 19 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இதேவேளை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக 34 சுயேட்சை குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று வெள்ளிக்கிழமை இறுதித் தினம் என்பதனால் இன்று ஒரே நாளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.