நாடாளுமன்ற தேர்தலில் மேலும் இரண்டு மூத்த அரசியல் வாதிகள் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரேஸ்ட அரசியல்வாதிகளான டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரே குறித்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அவர்கள் இருவரும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்த அழகப்பெரும, மாத்தறைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
அதேபோன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் "கேஸ் சிலிண்டர்" எனப்படும் கூட்டணிப் பட்டியல்கள் இரண்டிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.