சுருண்ட இந்தியா - முன்னணியில் நியூசிலாந்து ..!!!!

tubetamil
0

 இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கே அதிர்ச்சிகரமாக ஆல் அவுட் ஆகியுள்ளது.



இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கே அதிர்ச்சிகரமாக ஆல் அவுட் ஆகியிருக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 103 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்த சூழலில் இந்தியா சார்பில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோரையே எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி முன்னிலையைப் பெறும் என நினைக்கையில் இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் தடுமாறியாது. நேற்றைய நாளின் முடிவில் இந்திய அணி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டிம் சவுத்தியின் பந்தில் போல்டை பறிகொடுத்து டக் அவுட் ஆகியிருந்தார். ஜெய்ஸ்வாலும் கில்லும் ஆடிக்கொண்டிருந்த சூழலில் இன்றைய நாளை இந்திய அணி தொடங்கியது.


கோலியெல்லாம் ஏறக்குறைய புல் டாஸாக வந்த பந்தை கணிக்க முடியாமல் ஸ்கொயரில் ஆட முயன்று போல்ட் ஆகினார். சப்ராஸ் கான் வழக்கம் போல அடிதடியாக ஆட முயன்று அவுட் ஆனார். எந்த பேட்டரும் சரியாக சாண்ட்னரின் லைனை கணித்து பேட்டை விட்டு டிபன்ஸ் ஆடவில்லை. பெரும்பாலான பந்துகளை பேடில்தான் வாங்கிக் கொண்டிருந்தனர். சாண்ட்னரின் கரியரிலேயே அவர் எடுக்கும் முதல் 5 விக்கெட் ஹால் இதுதான்.


இந்திய அணி 103 ரன்கள் பின் தங்கியிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top