தமிழக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வயிற்று வலி காரணமாக அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் 73 வயதான அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ செயல்முறைக்காக இருதய மருத்துவர் ஒருவரின் பராமரிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவமனை தரப்புக்கள் கூறுகின்றன.
மே்லும், அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்த மருத்துவமனை அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.