எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் வேட்புமனுவை எதிர்பார்த்து காத்திருந்தும் அது கிடைக்காத சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் கடுமையாக உழைத்த சிலர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடலாம் என நம்புகின்றனர்.
ஆனால் ஒரு கட்சியில் இருந்து போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும் பலர் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.