மறைத்துவைக்கப்பட்டிருந்த அரச வாகனம் கண்டுபிடிப்பு....!!

tubetamil
0

 கொழும்பு - ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அரச இலச்சினையுடன் அரச வாகனமொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிணவறைக்கு அருகிலேயே வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் அரச இலச்சினையுடன் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்து வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள பிணவறைக்கு அருகில் நிறுத்திவிட்டு செல்லப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிணவறைக்கு அருகே பல நாட்களாக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், உரிமையாளர் இல்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து வெளிநபர் மூலம் வாகனத்தினை வைத்தியசாலை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையினர் தலையிட்டு, இது குறித்து நிர்வாகத்துக்குத் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் வாகனத்தின் புகைப்படங்களுடன் சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top