போதைப்பொருளுடன் கைதான நபருக்கு நீதிமன்றம் உத்தரவு..!

tubetamil
0

சாய்ந்தமருது சந்தைத்தொகுதியில் வாடகை வாகனங்களை வழங்குகின்ற நிறுவனம் எனும் பெயரில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த உரிமையாளரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தை தொகுதியின்  வாடகை வாகனங்களை வழங்குகின்ற நிறுவனம் நடாத்துகின்ற 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 15 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.


இதற்கமைய குறித்த வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய முகமட் அஸீஸ் முபீத் என்பவராவார். குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top