இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளபதிவில் மேலும் தெரிவிக்கையில்,
சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க - இலங்கை கூட்டுறவை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையில் அண்மையில் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானத்தை மாற்றியதன் மூலம் இந்த கூட்டாண்மை செயல்பட்டதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://x.com/USAmbSL/status/1846496039379087471?mx=2