இந்தியாவில் சமூக வலைத்தளம் ஊடாக மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தலை விடுத்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் சட்டீஸ்காரில் வசிக்கும் சிறுவன் ஒருவனை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , குறித்த சிறுவனின் தந்தையும் வேறு ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இன்று (16) எயார் இந்தியா விமானம் ஒன்று புதுடில்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு இண்டிகோ விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்துடன்
, விட மஸ்கட் மற்றும் ஜெட்டாவுக்குச் செல்லும் விமானங்கள் பல மணிநேரம் தாமதமாகியுள்ளன.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் தமது நண்பனுடன் பணம் தொடர்பான முரண்பாடுகளை அடுத்து அச்சுறுத்தும் வகையில், தமது முகப்புத்தக பக்கத்தில் புகைப்படப் பதிவுகளை இடுகை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, குறித்த மூன்று விமானங்களும் தமது இலக்கை நோக்கி செல்லும் வழியை மாற்றி, மீண்டும் புறப்பட்ட தளத்துக்கே திருப்பிவிடப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவன் விசாரணைகளின் பின்னர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 48 மணித்தியாலங்களில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட செய்திகளும் வெளியாகியிருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை கருத்திற்கொண்டு, இன்று அந்த குறிப்பிட்ட மூன்று விமானங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், ஏனைய விமானங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்று விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.