அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

tubetamil
0

 இலங்கையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அத்துடன் , அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.



தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் சில வர்த்தகர்கள் தேங்காய்களை வகைப்படுத்தி வெவ்வேறு விலைக்கு விற்பனை செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top