கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக அந்த பிரதேசத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா நகரங்களுக்கு இடையிலான ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
அதனடிப்படையில், பிரதான மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கத்தின் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.