தாய்லாந்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டின் விச்சிட்டில் உள்ள Ao Kham கடற்கரையில் அனுமதியின்றியும் தொழிலாளர் சட்டங்களை மீறியும் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு எதிராக ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக அவரை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மேலும், குறித்த நபரை பணியமர்த்திய தொழில் வழங்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இலங்கையர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.