யாழ் பல்கலைக்கழக டமானவர் ஒன்றிய தலைமை பொறுப்புகளில் மாற்றம்!

tubetamil
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார்.



இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜனின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார்.



இதேவேளை , சோ. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் இருந்த சிந்துஜன், பல்கலைகழக மாணவர் சங்கத்தையும் மாணவர்களையும் உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் கட்டமைப்பிலும் பண்புகளிலும் மாற்றங்களை நோக்கி வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.


மாணவர்களை அரசியல்படுத்தல் ,  அணிதிரட்டுதல் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாற்று நடவடிக்கை வடிவங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டது.


அத்துடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களிலும் மாணவர் ஒன்றியங்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைக்கும் குழுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top