இலங்கையில் ,மேலும் எரிபொருள் விலை குறைவடையும் என பொறியியலாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை காலமும் இயங்காமல் இருந்துள்ளதாகவும் வெளிநாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலை பெற்றுக்கொள்ள அதிகளவு பணம் செலுத்த வேண்டியிருந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சுத்திகரிப்பு நிலையங்களை மீள இயங்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர், எரிபொருள் விலை கணிசமாக குறைவடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.