கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, மாணவி ஒருவர் நேற்று முன் தினம் (7) தனது நண்பர்களின் உயிரிழப்ப்பு காரணமாக அந்த சொத்திலிருந்து மீளாத அவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்துள்ளார்.
இது குறித்து குறித்த மாணவி கல்வி பயின்ற கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் கோரவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தரே தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணையை முன்னெடுக்க மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொள்ளவுள்ளதுடன் இலங்கையில் செயற்படும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இதே வேளை கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவியும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்மையில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.