பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் திகதி ஆரம்பமாகி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த சீசன்களை நடிகர் கமலஹாசன் தொகுத்து நடத்தி வந்த நிலையில் இந்த சீசனில் அவ விலகியதை தொடர்ந்து "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" எனும் தொனிப்பொருளில் கடந்த 6 ஆம் திகதி முதல் நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள், ரவீந்தர் சந்திரசேகர், சாஞ்சனா, தீபக், தர்ஷா குப்தா, அர்னவ், அக்ஷிதா, விஜே விஷால், தர்ஷிகா, ஜாக்குலின், ரஞ்சித், முத்துக்குமரன், ஜெஃபிரி, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளே வந்த நிலையில் முதல் நாளே ஆண்கள் அணி - பெண்கள் அணி என பிரித்து போட்டு, இரு தரப்பையும் இந்த முறை மோத வைத்துள்ளார் பிக்பாஸ்.
ஆண்கள் அணியினர் ஒற்றுமையாக இருந்தாலும், பெண்கள் அணியினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆனால் ஆண்கள் அணி போலியாக சண்டையிட்டு மகளிர் அணியை ஏமாற்றியது வேறு லெவல் உத்தியாகவே பார்க்கப்பட்டது. சில போட்டியாளர்கள் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட நிலையில், ஜாக்குலினின் சீரியஸாக எடுத்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் 24 மணி நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை சச்சனா அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
சச்சனா ரகசிய கதவு வழியாக உள்ளே வந்து யாருக்கும் தெரியாமல் உள்ளே உட்கார... சச்சனாவை பார்த்த சந்தோஷத்தில் விஜே விஷால் கத்துகிறார்.
சச்சனா வீட்டிற்குள் திரும்பி வந்ததில் அனைத்து போட்டியாளர்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் குறைந்த கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் யார் என்று சச்சனா குறிப்பிட்டார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.