அனைவரும் சமன் என்ற பெருமையுடன் கூறக்கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் - அனுர உறுதி

tubetamil
0

நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



நேற்றைய தினம் (23) திருகோணமலையில் இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமான சட்டத்துடன் “நான் இலங்கையன்" என்று அனைவரும் பெருமையுடன் கூறக்கூடிய நாடு கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடை ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி மீது, வடக்கில் உள்ள மக்கள் பெருமளவில் விழிப்புணர்வைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top