ராஜபக்சக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல வெளிநாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதிய ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.
தமது குடும்பம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி உள்ளிட்ட அவரது தரப்பினர் பல வருட காலமாகக் குற்றம் சுமத்தி வருவதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் காலம் தற்போது நெருங்கியுள்ளதாக மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.