இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை மேலும் தொடரவுள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தவகையில் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களிட வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.