நாட்டில் உள்ள சந்தைகளில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.