இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் தடுப்பு காவல் உத்தரவினை பெற்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த நாட்டில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.