பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளி வந்த தகவல்

tubetamil
0

 குருணாகல் கிரியுல்ல பிரதேசத்தில் ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணியை சாப்பிட்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்மபவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.


இதில் பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமையை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.


கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

குறித்த உணவுப் பொட்டலத்தை மேலும் 3 குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். எனினும் உணவை சாப்பிட்டதும் இந்த மாணவிக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் உணவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top