எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் திகதியானது மாற்றப்படலாம் என சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி தேர்தலுக்கு நாட்கள் ஒதுக்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அக்டோபர் 11 ஆம் திகதி வரை, சட்டத்தின்படி வேட்புமனுக்கள் கோரப்பட்ட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்கெடுப்புக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த அக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்றும், நவம்பர் 29 ஆம் திகதி ஏழு வார காலம் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சட்டப்பூர்வ காலத்திற்குள் உள்ளடக்கப்படாத நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவும் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
இந்தச் சூழ்நிலையில் சட்ட ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் திகதி அனேகமாக மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.