நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கியவர்களின் விபரம் வெளியானது

tubetamil
0

 கடந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராயும் (parliament.lk) இணையத்தளம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த நாடாளுமன்றத்தில் அதிக பங்களிப்பை வழங்கிய உறுப்பினராக  கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல பெயரிடப்பட்டுள்ளார். இவர் 383 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.




இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளதுடன், இவர் 358 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.



இதன் பின்னர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகூடிய  நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதுடன்,பொருளாதாரம் மற்றும் நிதித் துறையில் அதிக பங்களிப்பை அளித்துள்ள அவர் 344 அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன 307 நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு நான்காவது இடத்தினை பெற்றுள்ளார்.

ஐந்தாவது இடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பெயரிடப்பட்டுள்ளதுடன்,. 292 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top