இலங்கையின் ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள், தமது தோல்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தேர்தலுக்கான, தமது கட்சியின் தேசியப் பட்டியலுக்கான வேட்பு மனுப் பட்டியலை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசியல்வாதிகள், உடனடி தோல்வியில் இருந்து தப்பிக்கப் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்க அனைத்து வேட்பாளர்களுடனும் ஒக்டோபர் 11ஆம் திகதியன்று, ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி பங்கேற்கும் கூட்டத் தொடர் நாடளாவிய ரீதியிலும் நடத்தப்படும் எநாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.