மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட பொ லீசார் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , குறித்த சடலம் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளதுடன்
கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த இதேவேளை குறித்த பெண்ணிற்கு நீரிழிவு நோய் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தனக்கு தானே மண்ணென்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.