காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் நேற்றிரவு (07) ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவெவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான தியதித்தவெவ சிவில் பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வரும் சம்சுதீன் தையூப் (45வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்
மாடு கட்டுவதற்காக தனது வீட்டுக்குப் பின்னால் சென்றபோது யானை மின்வேலியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.