யாஹ்யா சின்வார் கொலை - உறுதியாகாத ஹமாஸின் அடுத்த தலைவர்!

tubetamil
0

 


ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த உறுதிப்பஅடுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது 


நேற்றைய தினம்(17) தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார்.


இருப்பினும் அவரது இறப்பை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை சாத்தியக் கூறுகள் மேற்கொள்ளப்பட்டது, அதில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சின்வாரின் நடமாட்டம் முடக்கப்பட்டதோடு அவர் தற்போது வெளியேற்றவும் பட்டுள்ளார் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


குறித்த விடயம் தொடர்பில்  இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்  ஹ்யா சின்வா  ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்து மூளையாக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் அவரை படுகொலை செய்தது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” எனவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளை காசாவில் உள்ள பெரும்பாலான ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், யாஹ்யா சின்வாரின் வெளிப்படை வாரிசான அவரது சகோதரர் முகமது சின்வார்(Mohammed Sinwar) தற்போதைய நிலவரப்படி உயிருடன் இருந்தால் அடுத்த தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஆனால் முகமது சின்வாருக்கு அவரது சகோதரர் மற்றும் ஹமாஸின் தலைவரான யாஹ்வா சின்வாரின் அதிகாரமோ அல்லது பின்பற்றலோ இல்லாததால், அவரோ, மற்ற தலைவர்களோ ஹமாஸ் அமைப்பை ஒன்றாக வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top