இலங்கையின் பாதுகாப்பினை ஜனாதிபதியே முன்னெடுக்க வேண்டும் - நாமல் தெரிவிப்பு

tubetamil
0

இலங்கையின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



ஹட்டனில் நேற்று (25) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகம், சர்வதேச புலனாய்வு பிரிவுகள், அமைப்புக்கள் என்பனவற்றுடனும் முப்படையினர் மற்றும் பொலிஸாருடனும் இணைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top