முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அவர் தயாராகவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தேசிய பட்டியலிலும் இல்லாமல், தேர்தலில் போட்டியிடமாலும் எப்படி ரணில் நாடாளுமன்றத்திற்கு நுழைவார் என்பது பலரது கேள்வியாகியுள்ளது.
எனினும் இம்மமுறை சிலிண்டர் சின்னத்தில் பொது தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஊடாக ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.