இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
சனத் ஜயசூரிய இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றிருந்த போது இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.