ஒன்லைன் மோசடிகள் அதிகரிப்பு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

tubetamil
0

இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக  கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் . இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.

அத்துடன் ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளதாகவும் பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.என வவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாகவும்  சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top