பாணந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரை வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இருவரும் முறைசாரா உறவில் ஈடுபட்டுள்ள தம்பதிகள் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.