ஜெர்மனியின் சார்ப்ரூக்கனில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் 2024 பேட்மின்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய ஷட்லர்கள் சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் ஆயுஷ் ஷெட்டி புதன்கிழமை முன்னேறியுள்ளனர்
ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் 2024 போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை முன்னேறினர். சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் 7-ம் நிலை வீரரான சதீஷ்குமார் 20-22, 24-22, 21-17 என்ற செட் கணக்கில் சக வீரரான சிராக் சென்னை ஒரு மணி நேரம் 3 நிமிடம் போராடி வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.