இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படாததால் அதிர்ச்சியடைந்த சமயம் ஒன்று இன்றைய தினம் (11) ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்றைய தினம் அவர் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் எனினும் அவரது பெயர் நியமனப்பட்டியலில் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.