இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்றூ பற்றிக் புதிய ஜனாதிபதி அநுரவை சந்தித்து, மன்னரின் வாழ்த்துச்செய்தியை பரிமாறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் பற்றிக் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வித்துறையில் இணைந்து செயற்பவடுவதன் அவசியத்தையும் அவர் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் ஆதரவு வழங்கப்படும் என பிரித்தானியா உறுதிமொழி வழங்கியுள்ளது.