எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் (Sri Lanka Navy) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதில் கைதான 12 இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.