நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடந்து முடிந்தது
இதில் "நடிச்சோமா நாலு காசு பாத்தோமானு இருக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்குறது சுயநலம் இல்லையா. நம்மை வாழ வைத்த இந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விஸ்வசமாக இருக்குமா."
"ஒரு லெவலுக்கு மேல காசு சேத்து என்ன செய்ய போறோம். இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்ன தான் செய்ய போறோம். இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என் மனதில் வந்தது."
"அதற்கு வந்த ஒட்டுமொத்தமாக பதில் கண்டுபிடிக்க யோசித்தபோது வந்தது தான் 'அரசியல்' என ஒரு விடை கிடைத்தது."
"அரசியல் நமக்கு செட் ஆகுமா என பூதம் கிளம்பி வந்தது. பின்விளைவுகளை யோசிக்காமல் இறங்கி அடிச்சா தான் நம்மை நம்புபவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என மனதில் தோன்றியது. அதான் இறங்கியாச்சி. இனி எதை பற்றியும் யோசிக்க கூடாது" என மாஸாக பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் மாநாடு முடிந்த கையோ டு புத்தகங்களை கையோடு எடுத்து சென்ற விஜய்
மாநாட்டில் தனக்கு பரிசாக மற்றவர்கள் கொடுத்த புத்தகங்களை விஜய் கையோடு தூக்கி சென்று இருக்கிறார்.
இது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.