யாழில் பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்த வைத்தியர் அர்ச்சுனா

tubetamil
0

 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து கேலி செய்து மிகவும்அநாகரீகமாக மருத்துவர் இரா.அர்ச்சுனா செய்துள்ளமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட்ட நிலையில் இது சமூக வலைத்தளங்களில்  கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த சம்பவம் நேற்று (20) யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஒரு பெண் வேட்பாளரை மரியாதை இல்லாமல் வார்தைகளால் பேசியதுடன் அவரது துண்டு பிரசுரத்தை கிழித்து முகம் மற்றும் வாய் துடைத்து கேலி செய்தமை தொடர்பிலான வீடியோ காட்சி ஒன்றே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


இதற்கமைய பெண் வேட்பாளரை அருவருக்கத்தக்க வகையில் நடத்திக்கொண்ட மருத்துவர் இரா.அர்ச்சுனாவின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றமாய் குறிப்பிடத்தக்க்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top