தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் திகதி வெற்றிகரமாக ஆரம்பித்து ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் ரவீந்தர் வெளிறேப்பட்டுள்ளார்.
குறித்த இதே வேளை ஹிந்தியில் தொடங்கியிருக்கும் பிக்பாஸ் 18வது சீசனும் ஒரு வாரத்தை கடந்துள்ளது.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹாலிவுட்டில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் பிக்பாஸில் கலந்துகொள்ள பிரபலங்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் பிரபல நடிகையும், குக் வித் கோமாளி சீசன் வெற்றியாளருமான ஸ்ருதிகா ராஜ் ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி பாலிவுட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் செம என்டர்டெயின் செய்துவரும் ஸ்ருதிகாவுக்கு ஆரம்பத்தில் பாலிவுட் ரசிகர்கள் எதிர்மறை விமர்சணங்களை கொடுத்தாலும் தற்போது இவரின் உண்மையான சுபாவத்தை ஓரளவுக்கு புரிந்துக்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் 18 இல் கலந்துக்கொண்டு கலக்கி வரும் ஸ்ருதிகா ஹிந்தி பேசும் போட்டியாளர்களுக்கு தமிழ் பேச கற்றுக்கொடுத்து வருகிறார்.
அந்த காணொளியானது தற்போது இன்ஸ்டாகராம்மில் வைரலாகியுள்ளது.