இலங்கையில் நடைபெறும் புதிய அரசியல் மாற்றங்கள் இலங்கை அரசியலில் மாத்திரமின்றி பல சர்வதேச நாடுகளிலும் தாக்கம் செலுத்துவதாக கூறப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னரான அரசியல் கருத்துக்கள், மறைமுகமான இராஜதந்திர நகர்வுகள் மற்றும் இராணுவ விவகாரங்கள் பேசப்படுகின்றன.
அநுரகுமார இந்தியா தொடர்பில் சில இராஜதந்திர நகர்வுகளை எடுப்பதற்கு எத்தனித்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்குள்ள இந்தியாவின் நகர்வு அமெரிக்கவிற்கு பாதகமாக அமையும் என கூறப்படுகின்றது.
ஆனால் புதிய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்துவதால் அவரால் அமெரிக்க புலனாய்வு தகவல்களை உதாசீனம்படுத்த முடியாது அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.