நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தும் சாத்தியம் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.