வெங்காய இறக்குமதி தொடர்பில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

tubetamil
0

 வெங்காய இறக்குமதி வரி விதிப்பால் உள்நாட்டு விவசாயிகள் விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து அம்பாறை (Ampara) மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்  ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்தால், உள்நாட்டு விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்லத்துடன் 

அதனடிப்படையில் , இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது பயிர்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top