சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துள்ளதாக சீ ஷெல்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அவர் பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் அரச சபையில் நேற்று (16) அவர் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, வின்சென்ட் பெரேரா, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.