விக்கி அணியில் பிளவு - வெளியாகியுள்ள வேட்பாளர் விபரம்!

tubetamil
0

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் உறுதியாகியுள்ளது.

அண்மையில் முன்னாள்  முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான குறித்த கூட்டணியில் மணிவண்ணனுக்கு  முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கிச் சென்ற நிலையில் அதனை தொடர்ந்து  வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.


அதனடிப்படையில் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் - விளையாட்டு உத்தியோகத்தர்), உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top